கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபின்பு கருத்து தெரிவித்தால் நாங்கள் பதில் சொல்வோம் எடப்பாடி பழனிசாமி
கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபின்பு கருத்து தெரிவித்தால் நாங்கள் பதில் சொல்வோம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் லட்சியத்தை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது. அவர் நடித்து கொண்டு இருக்கிறார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபின்பு கருத்து தெரிவித்தால் நாங்கள் பதில் சொல்வோம். ஜெயலலிதா நினைவு மண்டபம் மக்கள் அனைவரும் பாராட்டும் வகையில் கட்டப்படும். இன்னும் இரு அணிகள் இணைப்பிற்கு வாய்ப்பு உள்ளது என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story