தமிழக அரசு பள்ளிகளில் திறந்த வெளியில் சத்துணவு வழங்கப்படுகிறது தணிக்கை அதிகாரி பேட்டி
தமிழக அரசு பள்ளிகளில் திறந்த வெளியில் சத்துணவு வழங்கப்படுகிறது என தணிக்கை அதிகாரி தேவிகா கூறியுள்ளார்.
சென்னை,
தணிக்கை அதிகாரி தேவிகா செய்தியார்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
பொதுமக்களுக்கு சிறந்த சாலை வசதி ஏற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சாலைப்பணிக்கான மதிப்பீடு அறிவுரையை பின்பற்றாததால் மத்திய அரசின் முனையத்தை பயன்படுத்த முடியவில்லை. தோட்டக்கலைக்கு தமிழக அரசு காலம் தாழ்த்தி நிதி வழங்கியது. தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் திறந்த வெளியில் சத்துணவு வழங்கப்படுகிறது.
சென்னை பெருநகர மேம்பாடு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் ரூ.9500 கோடி கேட்டது, தமிழக அரசு ரூ.2500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. 2014ல் 11.02% ஆக இருந்த உற்பத்தி அளவு, 2015ல் 10.64% ஆக குறைந்துவிட்டது. 2014-15ம் ஆண்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கிய ரூ.32.15 கோடியில், ரூ.20.37 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story