கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அவரை களத்தில் சந்திக்க தயாராக உள்ளோம்; அமைச்சர் ஓ.எஸ். மணியன்
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அவரை களத்தில் சந்திக்க தயாராக உள்ளோம் என தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார்.
சென்னை,
நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக சமீபத்தில் கூறினார். இதற்கு அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர் தொடர்ந்து தமிழக அரசு மீது அவதூறாக பேசினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என சில அமைச்சர்கள் கூறினர்.
அமைச்சர்களின் பேச்சுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல தலைவர்கள், சினிமா பிரமுகர்கள் அறிக்கை, பேட்டி அளித்தனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் நேற்று இரவு டுவிட்டரில் ஒரு தகவல் வெளியிட்டார். அதில், யாருமினி மன்னரில்லையென இடித்துரைப்போம். முடிவெடுத்தால் யாம் முதல்வர், தோற்றால் போராளி என தெரிவித்துள்ளார்.
இதனால் கமல்ஹாசன் அரசியலில் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும், விரைவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அவரை களத்தில் சந்திக்க தயாராக உள்ளோம் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் வரவேற்க தயாராக உள்ளோம்.
தமிழக அரசில் ஊழல் இருப்பது உண்மையானால் அதனை குற்றம் சொல்லும் கமலே நிரூபிக்கட்டும் என கூறியுள்ளார்.

Related Tags :
Next Story