110 அடி உயர பாலத்தில் நின்ற ஊட்டி மலைரெயில் சுற்றுலா பயணிகள் பீதி


110 அடி உயர பாலத்தில் நின்ற ஊட்டி மலைரெயில் சுற்றுலா பயணிகள் பீதி
x
தினத்தந்தி 22 July 2017 3:30 AM IST (Updated: 22 July 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் பகுதியில் பெய்த மழை காரணமாக மலைரெயில் 110 அடி உயர பாலத்தில் நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

ஊட்டி,

ஊட்டி மலை ரெயில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.15 மணிக்கு குன்னூர் நோக்கி புறப்பட்டது. நேற்று காலை முதல் குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதை பகுதியில் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

இதன் காரணமாக கல்லாறு-குன்னூர் இடையே சுமார் 11 இடங்களில் மலைரெயில் நின்று நின்று சென்றது.

காட்டேரி- ரன்னிமேடு இடையே தனியார் தேயிலை எஸ்டேட் அருகே பெரிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அருகே வந்த போது மலைரெயில் நடுவழியில் நின்று விட்டது. இந்த பாலம் 110 அடி உயரத்தில் அமைந்து உள்ளது.

இந்த பாலத்தில் மலைரெயில் நின்றதால் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகள் பீதி அடைந்தனர். இதையடுத்து ரெயிலை சிறிது தூரம் பின்னோக்கி நகர்த்தி நீராவி ஏற்றப்பட்டது.

இதையடுத்து வழக்கமாக 2 நிமிடத்தில் அந்த பெரியபாலத்தை கடக்கும் மலைரெயில் நேற்று 6 நிமிடம் எடுத்துக் கொண்டது. இது போன்ற காரணங்களால் மலை ரெயில் குன்னூர் ரெயில் நிலையத்துக்கு 1½ மணி நேரம் தாமதமாக காலை 11.45 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனால் ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

Next Story