தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தால் பதவிகள் தானாக தேடி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தால் பதவிகள் தானாக தேடி வரும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கொடிகாத்த குமரன் பிறந்த திருப்பூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏழைகளின் பசியை போக்க அம்மா உணவகத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். சத்துணவு திட்டத்திற்கு இணையாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவகம் திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. திரையுலகில் புகழின் உச்சம் தொட்டது போல் அரசியலிலும் புகழின் உச்சத்தை தொட்டவர் எம்.ஜி.ஆர். உலகிலேயே மக்கள் நலனுக்காக திரை ஊடகத்தை பயன்படுத்தியவர் எம்.ஜி.ஆர் மட்டும் தான். அதிமுக தற்போதும் ஒரு இரும்பு கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. எனக்கு பிறகும் 100 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் இருக்கும் என்ற ஜெயலலிதாவின் கூற்றை நிரூபிக்கும் வகையில் செயல்படுவோம்.
திருப்பூரில் ரூ.43 கோடியில் கட்டப்படும் மேம்பால பணி இந்த ஆண்டு நிறைவு பெறும். உழைப்பவர் திருப்பூர் வந்தால் கண்டிப்பாக வேலை உறுதி. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story