2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு கணவன்-மனைவி தற்கொலை
ஆலங்குளம் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
ஆலங்குளம்,
ஒரு குழந்தையும் பரிதாபமாக இறந்தது. மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த கடங்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் அகில பிரகாஷ் (வயது 32). பொக் லைன் எந்திர டிரைவராக இருந்த இவர் விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி உமாதேவி (28). இவர்களுக்கு இபிலினா (3), கீர்த்தி (1) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பம் அடைந்த உமாதேவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் பிரசவம் நடைபெற இருந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அகில பிரகாஷ் வீட்டில் இருந்து நீண்ட நேரமாக குழந்தையின் அழுகுரல் கேட்டது. பக்கத்து வீட்டில் இருந்த அகில பிரகாசின் தந்தை கணேஷ் என்னவென்று பார்த்தார். அப்போது வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்த மகன் அகில பிரகாஷ், மருமகள் உமாதேவி ஆகியோரை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். பேத்திகள் இபிலினா, கீர்த்தி ஆகிய இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். கணேசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.
உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம், மயங்கி கிடந்த 2 குழந்தைகளையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் குழந்தை கீர்த்தி பரிதாபமாக இறந்தாள். மற்றொரு குழந்தையான இபிலினா, ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த கணவன்- மனைவி இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு கணவன்-மனைவி எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பதற்கான காரணம் தெரியவில்லை. நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏதோ தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு அகில பிரகாஷ் விஷம் குடித்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story