மேகதாது அணை கட்டினால் கர்நாடக அரசை கலைக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
தடையை மீறி மேகதாது அணையை கட்டினால் கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
மத்திய அரசின் தடையை மீறி மேகதாது அணையை கட்டினால் கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரியில் நீர் கிடைப்பது என்பது அரிதிலும் அரிதானதாகி விடும். இதை உணர்ந்து தான் பிரதமர் நரேந்திர மோடியை 3 முறையும், நீர்வளத்துறை மந்திரி உமாபாரதியை 2 முறையும் நேரில் சந்தித்து பேசினேன். இதுதொடர்பாக உமாபாரதி எனக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில், ‘‘மேகதாது அணை குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் ஒப்புதலைப் பெற்று விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்திருந்தால் மட்டுமே அதை பரிசீலிப்போம். இல்லாவிட்டால் திருப்பி அனுப்பிவிடுவோம்’’ என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிய உமாபாரதிக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசின் தடையை மீறி மேகதாது அணை கட்டப் போவதாக அறிவித்திருப்பதை இந்திய அரசின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்க வேண்டும். இதுதொடர்பாக கர்நாடக முதல்–அமைச்சர் சித்தராமையாவை மத்திய அரசு அழைத்துப் பேசி, மேகதாது பகுதியில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிடும்படி வலியுறுத்த வேண்டும். அதையும் மீறி அணை கட்டும் பணிகளை தொடர்ந்தால் கர்நாடக அரசை கலைக்க வேண்டும்.
காவிரியை காப்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக கூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story