டி.டி.வி.தினகரன் 5–ந்தேதி கட்சி அலுவலகத்துக்கு வருகை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்

சென்னை,
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணியும் உதயமானது.
மேலும் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தனது தலைமையில் அ.தி.மு.க. ஜெ. தீபா அணியை ஆரம்பித்தார்.
இந்தநிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அ.தி.மு.க. அம்மா அணியின் பொறுப்பு டி.டி.வி.தினகரனுக்கு வழங்கப்பட்டது. அவருடைய தலைமையின் கீழ் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்பட்டு வந்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது ‘இரட்டை இலை’ சின்னத்தை பெற இந்திய தேர்தல் கமிஷனுக்கு டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் கடந்த ஏப்ரல் மாதம் 25–ந்தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். பின்னர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவர்கள் செயல்பட தொடங்கினர்.
மேலும் பிளவு பட்ட அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் முயற்சிகளும் நடந்தன. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு அணி தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அந்த நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்க மறுத்து விட்டனர். இது அ.தி.மு.க. இணைப்பு பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இந்தநிலையில் அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கான குழு கலைக்கப்படுவதாக கடந்த ஜூன் 11–ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க. இரு அணிகள் இணையுமா? என்பது கேள்விக்குறியானது.
இந்தநிலையில் டெல்லி திகார் சிறையில் 34 நாட்கள் இருந்த டி.டி.வி.தினகரன் கடந்த ஜூன் மாதம் 2–ந்தேதி ஜாமீனில் விடுதலை ஆனார். பின்னர் சென்னை திரும்பிய அவரை பெசன்ட்நகர் இல்லத்தில் அடுத்தடுத்து 37 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். வெற்றிவேல், கலைராஜன் உள்பட மாவட்ட செயலாளர்களும் டி.டி.வி.தினகரன் பக்கம் சென்றனர்.
தனது ஆதரவு நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார். அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து அதிரடி அறிவிப்பையும் டி.டி.வி. தினகரன் வெளியிட்டார். அதாவது, அ.தி.மு.க. இணைப்புக்காக 60 நாட்கள் கட்சி பணியில் இருந்து ஒதுங்கி இருப்பேன். அதற்குள் இணையவில்லை என்றால் ஆகஸ்டு 4–ந்தேதி என்னுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்று கூறினார். அதன்படி அவர் கட்சி பணி, நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருக்கிறார்.
டி.டி.வி.தினகரன் காலக்கடு விதித்ததை தொடர்ந்து அ.தி.மு.க. இரு அணிகள் இணையும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் 100 சதவீதம் அ.தி.மு.க. இணைப்பு நடைபெறும் என்று உறுதியாக தெரிவித்தனர்.
இந்தநிலையில் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றிருந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து அ.தி.மு.க. இணைப்பு குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும் இரு அணிகள் இணைப்பு என்பது தற்போது வரை கானல்நீர் போன்று இருக்கிறது.
அ.தி.மு.க. இணைப்புக்காக டி.டி.வி.தினகரன் வழங்கிய 60 நாள் காலக்கெடு 4–ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது. இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் அதற்குள் அ.தி.மு.க. இணைப்பு சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு 5–ந்தேதி டி.டி.வி.தினகரன் வருகை தர உள்ளார். அங்கு அவருடைய தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனது ஆதரவு மாநில, மாவட்ட நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் தமிழகம் முழுவதும் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும், அ.தி.மு.க. இணைப்புக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story