தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது கட்டுப்படுத்தும் பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் பணிகளில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழக மக்கள் தற்போது டெங்கு காய்ச்சல் நோயினால் பீதி அடைந்து இருக்கின்றனர். நல்ல தண்ணீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் ‘ஏடிஸ்’ கொசுக்களினால் இந்த நோய் பரவி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை உலுக்கி எடுத்துவரும் இந்த டெங்கு காய்ச்சல் இந்த ஆண்டும் வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதன் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. வீடு, பள்ளி, நிறுவனங்கள் ஆகியவற்றில் தேங்கி கிடக்கும் மழை நீரில் இருந்து உருவாகும் இந்த வகை கொசுக்களினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2010–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலினால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தற்போது சேலம், நாமக்கல் மாவட்டத்தில் தான் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் உள்ளது.
இந்த ஆண்டில் ஜூலை 23–ந் தேதி வரை 5,013 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தன்னுடைய இணையதளத்தில் பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2–வது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் கேரளா (12,906 பேர்) உள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–
டெங்கு காய்ச்சல் நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பது தான் எங்களுக்கு பெரிய சவாலாக இருக்கிறது. சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் தீவிர விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். வீடு, வீடாக சென்று கொசு புழுக்கள் வளருவதை எவ்வாறு தடுக்க வேண்டும்? என்பதை விளக்கி கூறுகிறோம்.
பொதுமக்களுக்கு குடிநீர் சுகாதாரமாக வழங்கப்படுகிறதா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் தேங்கி கிடக்கும் நீரில் இருந்து தான் இந்த வகையான கொசுப்புழுக்கள் உருவாகின்றன. எனவே பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story