சினிமா படப்பிடிப்புகள் இன்று வழக்கம் போல் நடைபெறும் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
சினிமா படப்பிடிப்புகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழக்கம் போல் நடைபெறும் என்றும், பெப்சி வேலைநிறுத்தத்தால் பாதிப்பு வராது என்றும், தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத்தலைவர் பிரகாஷ்ராஜ் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் கதிரேஷன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் தயாரிப்பாளர்கள் கேயார், முரளிதரன், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், சுந்தர்.சி, கே.ராஜன், அன்பாலயா பிரபாகரன், ஜாக்குவார் தங்கம், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும், நடிகர் பிரகாஷ்ராஜ், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–
பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். அவர்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல. பெப்சியுடன் நாங்கள் வேலை செய்யமாட்டோம் என்று சொல்லவில்லை. அவர்களுடனும் வேலை செய்வோம் என்று தான் கூறினோம். யாருடன் வேலை செய்வது, எத்தனை பேரை வேலைக்கு வைப்பது என்பது தயாரிப்பாளர்களின் உரிமை.
தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் பணியாற்ற மாட்டோம் என்று அறிவித்துள்ள பெப்சி, டெலிவிஷன் தொடர்கள், டாக்குமென்டரி படங்கள், விளம்பர படங்கள் போன்றவற்றில் வேலை பார்ப்பார்களாம். அவர்கள் மற்றவர்களுடன் வேலைப்பார்ப்பது போல் எங்களுக்கும் வேறு ஆட்களை வைத்து வேலை செய்ய உரிமை இருக்கிறது.
பெப்சி தொழிலாளர்கள் சம்பளத்தை நாங்கள் குறைக்கவில்லை. 45 நிமிடங்களுக்கு முழு பேட்டா வேண்டும் என்பதும், தூங்கிக்கொண்டு செல்வதற்கு பேட்டா கேட்பதும் சரி இல்லை என்று தான் சொல்கிறோம்.
சினிமா டிக்கெட் விலை, ஜி.எஸ்.டி. வரி போன்ற பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். யாருக்கோ சம்பளம் கொடுத்து படம் எடுக்க முடியாது. வேலைக்கு மட்டும்தான் சம்பளம் தரப்படும்.
நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப 10 நடிகர்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்குகிறார்கள். மீதி 90 சதவீதம் சிறுபடங்கள் தான்.
பெப்சி வேலைநிறுத்தத்தால் சினிமா படப்பிடிப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஒளிப்பதிவாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் வேலைக்கு வருவதாக அறிவித்துள்ளது. எனவே, படப்படிப்புகள் நாளை (இன்று) எவ்வித தடங்கலும் இன்றி வழக்கம் போல் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story