தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்து ஆலோசனை


தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்து ஆலோசனை
x
தினத்தந்தி 1 Aug 2017 3:13 PM IST (Updated: 1 Aug 2017 4:12 PM IST)
t-max-icont-min-icon

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன், தளவாய் சுந்தரம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சென்னை,

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாகவும், அது தொடர்பான பொறுப்பு தனக்கு இருப்பதாகவும்  தெரிவித்திருந்தார்.

அதேநேரம் அதிமுக அம்மா அணி கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் கட்சியின் தலைமை  அலுவலகத்தில்,முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை முக்கியமான ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று உணவு மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர்கள் திண்டுக்கல், சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலு மணி, ஜெயக்குமார், காமராஜ், செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் மற்றும் அ.தி.மு.க அம்மா  டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் இன்று தலைமை செயலகத்தில்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது.

Next Story