தினகரன் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பது குறித்து கவலையில்லை-ஜெயக்குமார்


தினகரன் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பது குறித்து கவலையில்லை-ஜெயக்குமார்
x
தினத்தந்தி 1 Aug 2017 7:11 PM IST (Updated: 1 Aug 2017 7:11 PM IST)
t-max-icont-min-icon

தினகரன் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பது குறித்து கவலையில்லை என ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சருடனான ஆலோசனைக்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்படவில்லை, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். எல்லோரும் விரும்புவது கூடி வந்தால் கோடி நன்மை.

ஆக. 5 முதல் தினகரன் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பது குறித்து கவலையில்லை.  சசிகலா, டிடிவி தினகரன் மீதான நிலைப்பாட்டில் தெளிவாகவே உள்ளோம்.

இரு அணிகளின் இணைப்பு பேச்சுவார்த்தை பல கட்டமாக நடைபெற்று வருகிறது. அதிமுக அம்மா அணி அதன் முடிவில் தெளிவாக உள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் அணிகள் இணைவதை விரும்புகின்றனர். எல்லோரும் தேவை என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே உள்ளது.   திமுக பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருந்தது. திமுக ஆட்சியால் தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story