‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ரஜினிகாந்தின் ‘காலா’ படப்பிடிப்பு ரத்து
‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
சென்னை,
‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. வெளியாட்களை வேலைக்கு அமர்த்தி விஷாலின் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினார்கள்.
பட அதிபர்களுடன் ஏற்பட்ட மோதலால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளது. தயாரிப்பாளர்கள், ‘பெப்சி’ தொழிலாளர்களுடன் வேலை செய்யமாட்டோம் என்று எடுத்த முடிவை திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட சம்பளத்தை குறைக்க கூடாது. பொது விதிகளை பேசி முடித்து கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படுத்த நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. சென்னையிலும், வெளியூர்களிலும் 50 புதிய படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வந்தன. இவற்றில் பணியாற்றிய லைட்மேன்கள், ஒப்பனை கலைஞர்கள், டிரைவர்கள், சமையல்காரர்கள் உள்பட பல்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறினார்கள். இதனால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன.
ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மும்பை தாராவி போன்ற அரங்குகள் அமைத்து கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. ரஜினிகாந்த் தினமும் வீட்டில் இருந்து இந்த படப்பிடிப்பு அரங்குக்கு சென்று நடித்து வந்தார்.
பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ரஜினிகாந்துக்கு ஒப்பனை செய்ய மேக்கப் கலைஞர்கள் யாரும் படப்பிடிப்பு அரங்குக்கு வரவில்லை. லைட்மேன்கள் உள்ளிட்ட இதர தொழிலாளர்களும் வரவில்லை. இதனால் காலா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதுபோல் சிறு முதலீட்டு படங்களின் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை.
ஒருசில படப்பிடிப்புகளை வெளியாட்களை வைத்து நடத்தினார்கள். விஷால் நடித்து வரும் துப்பறிவாளன் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் இருந்து பெப்சி தொழிலாளர்கள் வெளியேறி விட்டனர். அவர்களுக்கு பதிலாக பெப்சியில் இல்லாத வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை தடங் கல் இன்றி நடத்தினார்கள்.

Related Tags :
Next Story