இரு அணிகள் நிச்சயம் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை
இரு அணிகள் நிச்சயம் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைவதற்கு டி.டி.வி.தினகரன் விதித்த 60 நாள் கெடு வரும் 4-ந் தேதியுடன் முடிவுபெற இருக்கின்ற நிலையில், தற்போது அ.தி.மு.க.வின் 2 அணி நிர்வாகிகளும் இணைப்பு முயற்சியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். நேற்று இரு அணிகளும் தனித்தனியே தங்கள் அணியினருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இரு அணிகள் நிச்சயம் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது; பன்னீர்செல்வம் எங்களுடன் இணைவார். முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தான் கட்சியும், ஆட்சியும் நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, அமைச்சர் ஜெயக்குமாருக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். வெற்றி வேல் எம்.எல்.ஏ கூறும் போது, “ தினகரன் குறித்து தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து வந்தால், அவர் வகிக்கும் கட்சி பதவி மற்றும் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story