தமிழக கவர்னர், உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
துணைவேந்தர் நியமனத்தில் மோசடி குற்றச்சாட்டு காரணமாக தமிழக கவர்னர், உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது, துணைவேந்தர் தேர்வுக்குழுவின் உறுப்பினர்களான ஹரிஷ் மேத்தா, ராமகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் இடம் பெற்றுள்ள உண்மைகள் துணைவேந்தர் நியமனத்தில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளன.
தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ஹரிஷ் மேத்தா தாக்கல் செய்துள்ள மனுவில், ‘செல்லத்துரை மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் துணைவேந்தர் பதவிக்கு தகுதியற்றவர். அவர் அரசாங்கத்தின் தேர்வு என்று அமைப்பாளர் கூறியதால், அவரது பெயருக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.
காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த மே மாதம் 22–ந் தேதி பா.ம.க. கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்த குற்றச்சாற்றுகள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை என்பது தேர்வுக்குழு உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு மூலம் உறுதியாகி உள்ளது.
காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக தகுதியற்ற, குற்றப்பின்னணி உள்ளவர் நியமிக்கப்பட்டதற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழக கவர்னர் பொறுப்பேற்க வேண்டும்.
துணைவேந்தராக செல்லத்துரையை நியமிக்க ஆட்சியாளர்கள் ரூ.15 கோடி கையூட்டு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தும், கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட துணைவேந்தர்கள் நியமனம் குறித்தும் மத்திய புலனாய்வுப் பிரிவு(சி.பி.ஐ.) விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
துணைவேந்தராக நியமிக்கப்பட்டது முதல் இன்றுவரை செல்லத்துரை பிறப்பித்த ஆணைகள் அனைத்தும் கல்வியாளர் குழுவால் மறுஆய்வு செய்யப்பட வேண்டும். துணைவேந்தர் நீக்கப்பட வேண்டும். இந்த நியமனத்தில் நடந்த மோசடிக்கு பொறுப்பேற்று பல்கலைக்கழக வேந்தர்(கவர்னர்), இணைவேந்தர்(உயர்கல்வித்துறை அமைச்சர்) ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story