மாநில கண்காணிப்பு கமிஷனராக கூடுதல் தலைமை செயலாளர் ஜெயக்கொடி நியமனம்
தமிழகத்தின் கண்காணிப்பு கமிஷனர் மற்றும் நிர்வாக சீர்திருத்த கமிஷனராக கூடுதல் தலைமைச் செயலாளர் வி.கே.ஜெயக்கொடி நியமிக்கப்படுகிறார்.
சென்னை,
மதுரை ஐகோர்ட்டு கிளையில் மதுரை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. செயலாளர் கதிரேசன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்றவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் வாங்கியதாக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில், அவருக்கு டி.ஜி.பி. பணியை 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவது சட்டவிரோதம். எனவே, டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். அவர் மீதான லஞ்சப் புகாரை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘டி.ஜி.பி. மீதான புகாரை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் விசாரித்து வரும் நிலையில், அதை கண்காணிப்பதற்காக தனியாக நேர்மையான அதிகாரி ஒருவரை மாநில கண்காணிப்பு கமிஷனராக 2 வாரத்துக்குள் அரசு நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. புகார் குறித்த ஆவணங்களை விசாரணைக்கு உதவியாக வருமான வரித்துறையினர் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழ்நாடு மின்நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக இருக்கும் வி.கே.ஜெயக்கொடி, கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் கண்காணிப்பு கமிஷனர் மற்றும் நிர்வாக சீர்திருத்த கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.
எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், தமிழ்நாடு மின்நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மறு உத்தரவு வரும் வரை முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் இருந்த மாநில கண்காணிப்பு கமிஷனர் பதவி, ஏற்கனவே உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்ட்டியிடம் கூடுதல் பொறுப்பாகக் கொடுக்கப்பட்டது. தற்போது அந்தப்பதவி அவரிடம் இருந்து எடுக்கப்பட்டு வி.கே.ஜெயக்கொடியிடம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story