டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ஜெ.தீபா வலியுறுத்தல்


டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ஜெ.தீபா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Aug 2017 12:15 AM IST (Updated: 2 Aug 2017 11:07 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஜெ.தீபா அணி, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் நோய்க்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 35–க்கும் மேற்பட்டோர் வைரஸ் மற்றும் மர்ம காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவை ஒட்டி உள்ள மாவட்ட எல்லைகளில் தமிழக அரசு உடனடியாக தொற்று தடுப்பு விரைவு குழு அமைக்கவேண்டும்.

அரசு மருத்துவ கல்லூரிகள், மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் காய்ச்சல் சிறப்பு வார்டுகள் அமைக்கவேண்டும். கொசுவினால் ஏற்படும் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக அரசு டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story