அதிமுக எங்களிடம் தான் உள்ளது ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார்


அதிமுக எங்களிடம் தான் உள்ளது ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார்
x
தினத்தந்தி 3 Aug 2017 1:08 PM IST (Updated: 3 Aug 2017 1:08 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக எங்களிடம் தான் உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் பேட்டி அளித்தார்.

ஓ.பன்னீர்செல்வம்  அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தினகரன் வந்த பின்னால் என்ன நடக்கிறது, என்பதை பொறுத்து எங்களது கருத்துக்களை தெரிவிப்போம். தமிழக அரசு பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். நீட் தேர்லிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும். தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. கூவத்தூர் விடுதியில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியிருக்க வேண்டும் என்பது எங்களது கருத்து இவ்வாறு அவர் கூறினார்.

Next Story