ஓ.பி.எஸ்- எடப்பாடி அணிகள் இணையும் வாய்ப்பு இல்லை ஒருவர் மாறி ஒருவர் குற்றசாட்டு
ஓ.பி.எஸ்- எடப்பாடி அணிகள் இணையும் வாய்ப்பு இல்லை ஊழல் அரசு என ஒருவர் மாறி ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
சென்னை
ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்பி..கூறும் போது
பழனிசாமி தலைமையிலான அரசு ஒரு ஊழல் அரசு, ஜெயலலிதா உருவாக்கிய அரசு அல்ல .எனவே பழனிசாமி தலைமையிலான ஊழல் அரசுக்கு துணை போவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி . அணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, விரும்புவோர் பன்னீர்செல்வம் அணியில் சேரலாம் .பன்னீர்செல்வம் தலைமையில் சேரவரும் அனைவரையும் வரவேற்கிறேன். என கூறினார்.
மைத்ரேயனின் இந்த கருத்தை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வம் கூறும் போது மைத்ரேயன் தெரிவித்தது தமிழக மக்களின் கருத்து தான் என கூறினார். ஊழல் அரசுக்கு துணை போவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என மைத்ரேயன் தெரிவித்த கருத்துக்கு பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் தெரிவித்து பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் நடப்பது ஊழல் அரசு என்ற மைத்ரேயன் எம்.பி.யின் கருத்துக்கு, பதில் கூற விரும்பவில்லை என கூறினார்.
இது குறித்து தந்தி டிவிக்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத் கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு பன்னீர்செல்வம் கல் எறிய கூடாது என கூறினார்.
அமைச்சர் சிவி சண்முகம் கூறும் போது
ஊழல் பற்றி பேச பன்னீர்செல்வத்திற்கு தகுதி இல்லை அவர் வகித்த துறையிலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டுக்கு சேகர் ரெட்டியை அறிமுகப்படுத்தியது யார் அவர் பதில் சொல்லட்டும் இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியதாவது:-
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என மைத்ரேயன் எம்.பி.க்கு, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சவால் விடுத்து உள்ளார்.
அமைச்சர் மணிகண்டன் பன்னீர்செல்வம் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும் என கூறினார்.

Related Tags :
Next Story