அதிமுக அம்மா அணி டிடிவி தினகரன் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது - நாஞ்சில் சம்பத்
அதிமுக அம்மா அணி டிடிவி தினகரன் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என நாஞ்சில் சம்பத் கூறிஉள்ளார்.
சென்னை,
சசிகலா அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத் பேசுகையில், அதிமுக அம்மா அணி டிடிவி தினகரன் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது. ஜெயக்குமாருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்தப் பதவியும் தராமல் வைத்திருந்தார். அமைச்சர் ஜெயக்குமாருக்கு மீனவர் அணி செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் சசிகலா. ஆகஸ்ட் 5-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு, தினகரன் நிச்சயம் வருவார், 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தினகரனுக்கு உள்ளது என கூறிஉள்ளார்.
சினிமா வாய்ப்புகள் இல்லாததால் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய சூழல் கமல்ஹாசனுக்கு உள்ளது என கூறிஉள்ளார் நாஞ்சில் சம்பத்.
Related Tags :
Next Story