டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மேற்கு மாவட்டத்தை மட்டும் அச்சுறுத்திக் கொண்டிருந்த டெங்கு காய்ச்சல் இப்போது தலைநகரம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறது. காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு காய்ச்சலை முழுமையாக ஒழிப்பது என்பது உடனடியாக சாத்தியமில்லை என்றாலும் கூட, கடந்த கால அனுபவங்களின் மூலம் டெங்கு காய்ச்சல் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும், அதையும் தாண்டி டெங்கு பரவினால் அதை நவீன மருத்துவம் மூலம் குணப்படுத்துவதும் சாத்தியமான விஷயம் தான்.
டெங்கு அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் பதற்றம் அடையத் தேவையில்லை. டெங்கு காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதில் குணமடைந்து விடலாம்.
பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு சாறு ஆகியவற்றை காய்ச்சி குடிப்பதன் மூலமும், நிலவேம்பு கசாயத்தை அருந்துவதன் மூலமும் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்; குணப்படுத்தவும் முடியும். இதற்கெல்லாம் மேலாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடீஸ்’ கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது முக்கியமாகும்.
இந்த ஆண்டும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் நிலவேம்பு கசாயம் மக்களுக்கு வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story