ஏழை, எளிய இளைஞர்களுக்காக விளையாட்டு அகாடமி தொடங்க திட்டம் மாரியப்பன் பேட்டி


ஏழை, எளிய இளைஞர்களுக்காக விளையாட்டு அகாடமி தொடங்க திட்டம்  மாரியப்பன் பேட்டி
x
தினத்தந்தி 4 Aug 2017 3:30 AM IST (Updated: 3 Aug 2017 10:45 PM IST)
t-max-icont-min-icon

ஏழை, எளிய இளைஞர்களுக்காக விளையாட்டு அகாடமி தொடங்க திட்டம் அர்ஜூனா விருது பெறும் மாரியப்பன் கூறியுள்ளார்.

சேலம்,

அர்ஜூனா விருது பெறுவது குறித்து தடகள வீரர் மாரியப்பன் கூறியதாவது:–

பாராஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதற்காக ஏற்கனவே மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து என்னை கவுரவித்தது. அதைத் தொடர்ந்து தற்போது விளையாட்டுத்துறை சார்பில் எனக்கு அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விளையாட்டுத்துறையில் ஏழை, எளிய இளைஞர்கள் திறமை இருந்தால் சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் மற்றவர்களுக்கு முன்உதாரணமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. இன்னும் 6 மாதத்தில் காமன்வெல்த் போட்டி நடைபெற இருப்பதால் அதில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். காமன்வெல்த் போட்டி முடிந்தவுடன், தமிழ்நாட்டில் புதிதாக விளையாட்டு அகாடமி ஆரம்பிக்க முடிவு செய்துள்ளேன். அதில், ஏழை, எளிய இளைஞர்களும், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களும் சேர்ந்து கொள்ளலாம். அவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு மாரியப்பன் கூறினார்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள பெரிய வடுகம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பல்வேறு தரப்பினரும், வீரர்களும், நண்பர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

Next Story