‘நீட்’ தேர்வு விவகாரத்தில் அரசியல் தலையீட்டால் மாணவர்கள் பாதிப்பு தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் அரசியல் தலையீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை கிண்டியில் உள்ள தீரன்சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:–
மத்தியில் தேசப்பற்றுக்கு மரியாதை செலுத்தும் ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. தென்னகத்துக்கான இரட்டை ரெயில் பாதையை மின்மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது கிடப்பில் போட்ட திட்டத்துக்கு பாரதீய ஜனதா அரசு உயிர் கொடுத்து உள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் காங்கிரஸ் கட்சிக்காக சி.பி.ஐ., வருமான வரித்துறையை பயன்படுத்தியது. பெங்களூருவில் எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த நிறுவனத்தின் மீது வந்த புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு தங்கி இருந்தவர்களுக்காக சோதனை நடத்தப்படவில்லை.
கல்வி துறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக தீவிரமான ஆய்வுக்குப்பின் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி ‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அரசியல்வாதிகள் தலையீட்டால் மாணவர்களை குழப்பி நிலையான முடிவு எடுக்க முடியாத நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.
இதனால் அரசியலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அரசியல் தலையீட்டால் மாணவர்களின் கல்வித்தரம் பாதித்து உள்ளது. தமிழக மாணவர்கள் திறமையானவர்கள். அவர்களை ஊக்குவிப்பதை விட்டு தொடர்ந்து ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன் போன்றவர்கள் கூறி வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சி செய்த காலத்தில் மாணவர்களை அகில இந்திய போட்டி தேர்வுகளை சந்திக்கும் வகையில் தயார் செய்து இருக்க வேண்டும். அவர்கள் செய்த தவறை மறைக்க மாணவர்களை குழப்பி திசை திருப்பக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story