தமிழக அமைச்சர்களை மத்திய அரசு மிரட்டுகிறது கோவையில் திருநாவுக்கரசர் பேட்டி
‘வருமானவரித்துறை சோதனை மூலம் தமிழக அமைச்சர்களை மத்திய அரசு மிரட்டுகிறது’ என்று திருநாவுக்கரசர் கூறினார்.
கோவை
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடைசி நேரத்தில் முதல்–அமைச்சரும், அமைச்சர்களும் டெல்லிக்கு சென்று நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயற்சிப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல். தமிழக மாணவர்களின் கல்வி தரம் உயரும் வரை ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். தொடங்கி ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க. தற்போது பிளவுபட்டுள்ளது.
பா.ஜனதா கட்சி கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அதையும் மீறி தமிழக அமைச்சர்கள் பா.ஜனதாவிற்கு பயப்படுவதற்கு காரணம் அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று தான் அர்த்தம். மேற்கு வங்காள முதல்–மந்திரி, புதுச்சேரி முதல்–மந்திரி ஆகியோர் மத்திய அரசை கண்டு பயப்படுகிறார்களா? இல்லையே?. மத்திய அரசு வருமானவரித்துறையை வைத்து தமிழக அமைச்சர்களை மிரட்டி பணிய வைக்கிறது.
அ.தி.மு.க. அரசு 3 மாதங்களிலும் கவிழலாம். 3 நாளிலும் கவிழலாம். கதிராமங்கலம் பிரச்சினை, டெல்லியில் விவசாயி அய்யாக்கண்ணு போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை சமாளிக்க தமிழக அரசு தவறி விட்டது. இதனால் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்தால் அ.தி.மு.க. ஆட்சி கவிழும். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி துணை நிலை ஆளுனர் போல செயல்படாமல், இன்னும் டி.ஜி.பி.போன்று செயல்படுகிறார். அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். காங்கிரஸ் கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story