எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னையில் நாளை நடக்கிறது
சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னையில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
சென்னை,
சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னையில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் எம்.ஜி.ஆருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கவுரவிக்கப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக மனிதநேய மைய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சைதை துரைசாமியின் மனித நேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வி அறக்கட்டளை மற்றும் இதயக்கனி மாத இதழ் இணைந்து எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை பிரமாண்டமான அளவில் வருகிற 5-ந் தேதி (நாளை) சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் நடத்துகிறது.
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற இருக்கும் இந்த விழா நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அதன்பின்னர், கோவை யோகா மாஸ்டர் பாலகிருஷ்ணன் தனது குழுவினருடன் யோகா பயிற்சி நிகழ்ச்சியினை வழங்குகிறார். தொடர்ந்து கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம் குழுவினர் எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றை வில்லிசை பாடல்கள் மூலம் வழங்குகின்றனர்.
இசை நிகழ்ச்சி
இதையடுத்து பொதுநல சங்கத்தினரை பாராட்டி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சென்னை நகரில் செயல்பட்டு வரும் பொது நலச்சங்க அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கும், மாநகராட்சிக்கும் ஆங்காங்கே உள்ள பிரச்சினைகள், குறைபாடுகளை களைய தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து அவை நிறைவேறும் வரை சளைக்காமல் செயல்பட்டு சேவையை மட்டுமே பிரதானப்படுத்தி சிறப்பாக செயல்படும் அமைப்புகள் கலந்துகொள்கின்றனர்.
பிற்பகலில் பிரபல மெல்லிசைக்குழு ‘லஷ்மன் ஸ்ருதி’யின் இசை நிகழ்ச்சியோடு தொடங்கி இரவு வரை நடைபெறும். இதில் எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் பாடல்கள் மட்டுமே இசைக்கப்படும்.
நூல் வெளியீடு
எம்.ஜி.ஆருடன் பழகிய, பணிபுரிந்த முன்னாள் அமைச்சர்கள், அன்றைய சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், எம்.ஜி.ஆர். உடல்நலம் பேணிய மருத்துவர்கள், ராமாவரம் தோட்ட எம்.ஜி.ஆர். இல்லத்தில் பணிபுரிந்த ஊழியர்கள், எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக பணியாற்றியபோது அரசில் பணிபுரிந்த உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் திரை உலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் ஆகியோரும் விழாவில் பாராட்டி கவுரவிக்கப்பட உள்ளனர்.
நிகழ்ச்சியின் நடுவே எம்.ஜி.ஆர். பிரபலப்படுத்திய சிலம்பாட்டம், சிலம்ப வீச்சு வீரர்களுடன் நடக்கிறது. மேலும் ‘அண்ணாயிசம்’ மறு பதிப்பு நூல் மற்றும் இதுவரையிலும் வெளிவராத எம்.ஜி.ஆரின் கட்டுரைகள், பேச்சு தொகுப்பு நூல் (கழக நாளேடு தென்னகம் இதழில் அவர் எழுதியது) வெளியிடப்படுகிறது.
பிரதான நோக்கம்
எம்.ஜி.ஆர். வளர்ச்சிக்கு வேர்களாக இருந்த எம்.ஜி.ஆரின் புகழுக்கும் பெருமைக்கும், அவருக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டு பணியாற்றிய அவரது உண்மை தொண்டர்கள், விசுவாசிகள், தீவிர ரசிகர்கள், பக்தர்கள் மற்றும் சமூகத்தில் பல நிலைகளில் உள்ள பண்பாளர்கள் ஆகியோரின் நினைவுகளை, அனுபவங்களை தக்க புகைப்பட ஆதாரங்களுடன் ஒழுங்குபடுத்தி ‘வேர்களுக்கு வெளிச்சம்’ என்ற தலைப்பில் ஆவணமாக, ஒளிப்படமாக தயார் செய்யும் பணி இந்த விழாவில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியின் பிரதான நோக்கமே இது தான்.
தி.மு.க.வில் இருந்து 1972-ல் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டு அவர் கட்சி தொடங்கிய போது, உயிர்நீத்த தொண்டர்களின் குடும்பத்தினர், கட்சிக்காக தொடர்ந்து பாடுபட்ட தியாகிகள், கட்சிக்காக பச்சைக்குத்தி கொண்டவர்கள், இப்படி பல்வேறு தரப்பில் உள்ள 1972 முதல் 1987 வரையிலான கழகத்தில் உயிர்நாடியாக விளங்கியவர்களில் சிலர் இந்த நூற்றாண்டு விழாவில் அடையாளப்படுத்தி கவுரவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story