அ.தி.மு.க.வின் உச்சக்கட்ட குழப்பத்தை பயன்படுத்த தி.மு.க. தயாராக இல்லை மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க.வில் நிலவும் உச்சக்கட்ட குழப்பத்தை பயன்படுத்த தி.மு.க. தயாராக இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் உச்சகட்டக் குழப்பம் ஏற்பட்டு இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?.
பதில்:- அந்த உச்சகட்ட குழப்பங்களை எல்லாம் பயன்படுத்த தி.மு.க. தயாராக இல்லை. எங்களுடைய பணி என்றைக்கும் மக்களுக்கான பணி. எங்களுடைய பணி கட்சிப்பணிகளை, கடமைகளை நாங்கள் செவ்வனே ஆற்றி வருகிறோம்.
கேள்வி- அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களால் அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டு உள்ளதே?.
பதில்:- அதனால் தானே செயல்படாத ஆட்சி என்று சொல்கிறோம். இதுவொரு ‘குதிரை பேர’ ஆட்சி. இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், ‘நீட்’ தேர்வுப் பிரச்சினையாக இருந்தாலும், ‘உதய்’ மின் திட்டப் பிரச்சினையாக இருந்தாலும், உணவுப்பாதுகாப்புத் திட்டம் என எந்தப் பிரச்சினை பற்றியும் அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. இந்த ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும், அதற்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுப்பது, கமிஷன் கொடுப்பது என்பது பற்றி மட்டும் தான் அவர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதையும் தாண்டி, அவர்களுடைய தலைகளுக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்திகளாக உள்ள வருமான வரித்துறை வழக்குகள், அமலாக்கத் துறை வழக்குகள், தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள நோட்டீசுகள் ஆகியவற்றில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக மத்திய அரசிடம் மண்டியிட்டு, சரணாகதி அடைந்திருக்கக்கூடிய நிலை இருக்கின்ற காரணத்தால், தமிழ்நாட்டில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என்பது தான் உண்மை. அதனால், பொதுமக்கள் பல துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாகி வருகிறார்கள்.
கேள்வி:- எடப்பாடி தொகுதியில் தி.மு.க. சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தினை நீங்கள் பார்வையிட ஏன் அனுமதி தரவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதே?.
பதில்:- அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்குக் காரணம், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையா அல்லது கவுரவப் பிரச்சினையா என்று உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதை நான் விமர்சிக்கக்கூடாது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அங்கு சென்று ஆய்வு செய்யும் உரிமை இருக்கிறது. அதைத்தான் நீதிமன்றத்தில் நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகு அதுபற்றி முடிவெடுக்கப்படும்.
கேள்வி:- மீண்டும் அந்தக் குளத்துக்குச் சென்று பார்வையிட உள்ளர்களா?.
பதில்:- நிச்சயமாக அங்கு சென்று பார்ப்பேன். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், முறைப்படி அங்கு செல்வேன். எடப்பாடியில் மட்டுமல்ல, தி.மு.க. தொண்டர்கள் எங்கெல்லாம் நீர் நிலைகளைத் தூர்வாரி இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சென்று அவற்றைப் பார்வையிடும் உரிமை எனக்குள்ளது. எனவே, நிச்சயமாக அவற்றை எல்லாம் சென்றுப் பார்ப்பேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Tags :
Next Story