சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2017 10:09 AM IST (Updated: 4 Aug 2017 10:09 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வில் பிளவுபட்டு நிற்கும் 2 அணிகள் இணைவதற்கு, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் 60 நாள் ‘கெடு’ விதித்திருந்தார். இந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனாலும், 2 அணிகள் இணைவது தொடர்பாக நேரடி பேச்சு வார்த்தை எதுவும் தொடங்கப்படவே இல்லை.மாறாக, எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் எதிர்... எதிர்... துருவங்களாக நின்றுகொண்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு அம்புகளை எய்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வமும் தமிழக அரசை ஊழல் அரசு என்று வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், 2 அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தை எதுவும் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் கட்சிப் பணியில் இறங்க ஆயத்தமாகிவிட்டார். இதுதொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், ‘‘தீவிர கட்சிப் பணியில் ஈடுபட இருக்கிறேன். வரும் 5–ந் தேதி (நாளை) கட்சி அலுவலகம் சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்’’ என்றும் கூறியிருந்தார். 

டிடிவி தினகரன் விதித்த கெடு இன்றுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுக கட்சி வட்டாரத்தில் பரப்பான சூழல் காணப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

Next Story