தமிழகம் முழுவதும் உள்ள கட்சி மாவட்ட நிர்வாகிகள் நாளை சென்னை வர ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு


தமிழகம் முழுவதும் உள்ள கட்சி மாவட்ட நிர்வாகிகள் நாளை சென்னை வர ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு
x
தினத்தந்தி 4 Aug 2017 10:56 AM IST (Updated: 4 Aug 2017 10:56 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் உள்ள கட்சி மாவட்ட நிர்வாகிகள் நாளை சென்னை வர முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்து உள்ளார்.

சென்னை

அ.தி.மு.க.வில் பிளவுபட்டு நிற்கும் 2 அணிகள் இணைவதற்கு, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் 60 நாள் ‘கெடு’ விதித்திருந்தார். இந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

ஆனாலும், 2 அணிகள் இணைவது தொடர்பாக நேரடி பேச்சு வார்த்தை எதுவும் தொடங்கப்படவே இல்லை. மாறாக, எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி நின்றுகொண்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இந்த நிலையில்  ஓ.பன்னீர்செல்வம்  தமிழகம் முழுவதும் உள்ள கட்சி மாவட்ட நிர்வாகிகள் நாளை சென்னை வர அழைப்பு விடுத்து உள்ளார். என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story