‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார் என்பதை முடிவு செய்யவில்லை’ தேர்தல் கமிஷன் விளக்கம்
உட்கட்சி பூசலால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5–ந் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த கட்சி, இரண்டாக பிளவுபட்டது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்னொரு அணியும் உதயமாயின.
ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12–ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடி, அந்த சின்னத்தில் போட்டியிட விரும்பினர். இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் இரு தரப்பினரும் பிரச்சினை எழுப்பி, மனுக்களை தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. கட்சி பெயரை இரு அணியினரும் பயன்படுத்த தேர்தல் கமிஷன் தடை விதித்தது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது.
சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணிக்கு தொப்பி சின்னமும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணிக்கு மின்கம்பம் சின்னமும் ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் கமிஷன், அந்த சின்னம் யாருக்கு என்பதையும், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? என்பதையும் விசாரணைக்கு பின் தெரிவிப்பதாக அறிவித்தது.
இந்த நிலையில் காசிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தலைமை தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக யாரை அங்கீகரித்து இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு இருந்தார்.
அதற்கு தேர்தல் கமிஷன் அளித்துள்ள பதிலில், ‘‘அ.தி.மு.க.வில் தற்போதும் உட்கட்சி பூசல் தொடர்ந்து நீடித்தபடி நிலுவையில் உள்ளது. எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார் என்பதை தேர்தல் கமிஷன் இன்னும் முடிவு செய்யவில்லை’’ என்று கூறி உள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யும், வக்கீலுமான மனோஜ்பாண்டியன் கூறியதாவது:–
அ.தி.மு.க. சட்ட விதிப்படி பொதுச் செயலாளரை கட்சி தொண்டர்கள்தான் தேர்ந்து எடுக்க முடியும். ஆனால், சசிகலா தொண்டர்களால் தேர்ந்து எடுக்கப்படவில்லை. எனவே அவரது நியமனம் செல்லாது என்று நான் தேர்தல் கமிஷனில் ஏற்கனவே இதுபற்றி வழக்கு தொடர்ந்திருந்தேன். அந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்துவிட்டது. இதன் மீது தேர்தல் கமிஷன் விரைவில் முடிவை அறிவிக்கும்.
எனவே சசிகலாவை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? இது இன்னும் முடிவாகவில்லை. தேர்தல் கமிஷன் இணையதளத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பெயர் இன்னும் இடம்பெறவில்லை. இது தான் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து அ.தி.மு.க. (அம்மா) அணி வக்கீல் செந்தில் கூறுகையில், ‘‘அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களை விசாரிக்க தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது. கட்சி சின்னம் தொடர்பாகத்தான் அவர்களால் முடிவு எடுக்க முடியும். கட்சியின் பொதுச் செயலாளர் யார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவை பொதுக்குழு தேர்ந்து எடுத்தது. அந்த நகலை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்து உள்ளோம்’’ என்றார்.
மேலும், ‘‘ஒவ்வொரு கட்சியின் தேர்தல் முடிவுகளை வாங்கி பதிவு செய்வதுதான் தேர்தல் கமிஷனின் பணியாகும். எனவே கட்சிக்கு பொதுச் செயலாளர் யார் என்பதை தேர்தல் கமிஷன் முடிவு செய்து அறிவிக்க முடியாது’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Tags :
Next Story