அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தார், டி.டி.வி.தினகரன்
அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு கூடுதலாக புதிய நிர்வாகிகளை டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.
சென்னை,
சட்டசபையில் தனக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு டி.டி.வி. தினகரன் பதவிகளை வழங்கியுள்ளார். இதன்மூலம் அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள் தனது பலத்தை அதிகரிக்கும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.
அ.தி.மு.க. (அம்மா) அணியில் இருந்து ஒதுக்கியிருந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று முதல் கட்சி பணிகளை தொடங்கினார்.
முதல் கட்டமாக பொதுக்கூட்ட அறிவிப்புகளை வெளியிட்ட அவர், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுக்கு பதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை பத்திரிகையாளர்கள் மத்தியில் டி.டி.வி. தினகரன் நேற்று இரவு வெளியிட்டார்.
டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
அ.தி.மு.க. (அம்மா) கூடுதல் தலைமை கழக நிர்வாகிகளாகவும், சார்பு அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் மற்றும் கூடுதல் நிர்வாகிகளாகவும் கீழ் கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அமைப்பு செயலாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் பி.பழனியப்பன், வி.செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ஜக்கையன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மேலூர் ஆர்.சாமி, முன்னாள் அமைச்சர்கள் சண்முகவேலு, மாதவரம் மூர்த்தி, டி.கே.எம். சின்னையா, முக்கூர் சுப்பிரமணியன், கே.டி.பச்சைமால், செந்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், சேலஞ்சர் துரை என்ற துரைசாமி, ஆர்.பி. ஆதித்தன், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், திருவாரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் காமராஜ், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் செயலாளர் மாணிக்கராஜா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
கொள்கைபரப்பு துணை செயலாளர்களாக நாஞ்சில் சம்பத், இளவரசன் (ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர்), தேர்தல் பிரிவு இணை செயலாளர்களாக ஆர்.தங்கதுரை (நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்), திருப்பூர் சிவசாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக கே.கே.சிவசாமி (விவசாய பிரிவு முன்னாள் செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் ஆர்.ஆர்.முருகன், கோதண்டபாணி, மகளிர் அணி இணை செயலாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் ஜெயந்தி பத்மநாபன், சத்யா பன்னீர்செல்வம், உமா மகேஷ்வரி, சந்திரபிரபா, விவசாய பிரிவு இணை செயலாளராக ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் ஆம்பூர் சுப்பிரமணி, மாரியப்பன் கென்னடி, ஏழுமலை, பழனி, எதிர்கோட்டை சுப்பிரமணி, இசக்கி சுப்பையா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், தொட்டியம் ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சட்டசபையில் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தற்போது பதவி வழங்கப்பட்டு இருப்பது இந்த அறிவிப்பின் மூலம் தெளிவாகி உள்ளது. கூடுதல் நிர்வாகிகளாக என்று டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டு இருப்பதன் மூலம் அ.தி.மு.க. (அம்மா) அணியில் இருந்து யாருக்கும் பதவி பறிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டி.டி.வி. தினகரனின் கூடுதல் நிர்வாகிகள் அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் நிர்வாகிகளை அறிவித்ததன் மூலம் அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள் தனது பலத்தை அதிகரிக்க செய்துள்ளார்.
சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story