தேடப்படும் நபராக அறிவித்ததை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் வழக்கு
தேடப்படும் நபராக தன்னை அறிவித்ததை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை 7-ந் தேதிக்கு ஐகோர்ட்டு தள்ளி வைத்துள்ளது.
சென்னை,
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுத்தருவதாக கூறி மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து, சிதம்பரத்தின் வீடு உள்பட 17 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. போலீசார் சம்மன் அனுப்பினார்கள். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக அவரை தேடப்படும் நபராக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 18-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில், கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசியல் பழிவாங்கும் நோக்குடன், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றின் அதிகாரங்களை எனக்கு எதிராக தவறாக பயன்படுத்தி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் என் தந்தை நிதி மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார். நான், 1996-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறேன்.
எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு நேரில் ஆஜராகும்படி, சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அப்போது நான் வெளிநாட்டில் இருந்ததால், ஆஜராக முடியிவில்லை. எனது வக்கீல் மூலம் வழக்கு தொடர்பான விளக்கத்தை அளித்தேன்.
அதேநேரம், சி.பி.ஐ. அனுப்பிய சம்மனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு கடந்த ஜூலை 21-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, என்னை தேடப்படும் நபராக ஜூலை 18-ந் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து எந்த தகவலையும் ஐகோர்ட்டுக்கு மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில், இங்கிலாந்து நாட்டிற்கு வருகிற 16-ந் தேதி போக திட்டமிட்டுள்ளேன். ஆனால், என்னுடைய வெளிநாட்டு பயணத்தை தடுக்கும் விதமாக, மத்திய அரசு என்னை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அனைத்தும், அரசியல் பழிவாங்கும் செயலாகும்.
எனவே, என்னை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்தது, சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபால், இந்த மனுவுக்கு மத்திய அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, விசாரணையை 7-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story