தினகரன் கொடுத்த பதவி வேண்டாம் 3 எம்.எல் ஏக்கள் மறுப்பு


தினகரன் கொடுத்த பதவி வேண்டாம் 3 எம்.எல் ஏக்கள் மறுப்பு
x
தினத்தந்தி 5 Aug 2017 1:29 PM IST (Updated: 5 Aug 2017 1:29 PM IST)
t-max-icont-min-icon

தினகரன் கொடுத்த பதவி வேண்டாம் என 3 எம்.எல் ஏக்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

சென்னை

அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செய லாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை அ.தி.மு.க. அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை  அதிரடியாக வெளியிட்டார்.

நேற்று வெளியிடப்பட்ட நிர்வாகிகள் நியமன பட்டியலில் 20 எம்.எல்.ஏக்களுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த 20 பேரில் பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி மற்றும் திருப்பரங்குன்றம் ஏ.கே போஸ் ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரன் கொடுத்த பதவியை ஏற்க மறுத்துள்ளனர்.

தினகரன் அளிக்கும் பதவியில் செயல்பட விரும்பவில்லை என்றும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து செயல்படவே விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

Next Story