ராகுல்காந்தி கார் மீது கல்வீச்சு சம்பவம் திருநாவுக்கரசர் திடீர் மறியல்


ராகுல்காந்தி கார் மீது கல்வீச்சு சம்பவம் திருநாவுக்கரசர் திடீர் மறியல்
x
தினத்தந்தி 5 Aug 2017 1:57 PM IST (Updated: 5 Aug 2017 1:57 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கார் மீது கல் வீசப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டார்.

சென்னை,

தமிழக மகளிர் காங்கிரஸ் போராட்டத்தை தொடங்கி வைத்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கார் மீது கல் வீசப்பட்டதை கண்டித்து பேசினார்.

பின்னர்  திடீரென்று தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் தொண்டர்களுடன்  அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  எந்த  முன் அறிவிப்பின்றி திடீரென மறியலில்  ஈடுபட்டதால்  போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் சிரமப்பட்டனர்.

சுமார் அரைமணி நேரம் மறியல் போராட்டம் நீடித்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட திருநாவுக்கரசர், குமரி அனந்தன், முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story