சென்னையில் பலத்த மழை வெப்பம் தணிந்து குளுமை பரவியது


சென்னையில் பலத்த மழை வெப்பம் தணிந்து குளுமை பரவியது
x
தினத்தந்தி 5 Aug 2017 5:01 PM IST (Updated: 5 Aug 2017 5:01 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.


சென்னை

தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. தென் மாநிலங்களில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்கிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

பிற்பகல் நேரத்தில் திடீர் என சென்னை முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. மெரீனா கடற்கரை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூரில் மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.

 எழும்பூர், அண்ணாசாலை, ராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

Next Story