சோதனை அடிப்படையில் 2 வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரம் வரை நீட்டிப்பு


சோதனை அடிப்படையில் 2 வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரம் வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2017 3:45 AM IST (Updated: 6 Aug 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

*கவுகாத்தி–சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வந்த கவுகாத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டு கவுகாத்தி–தாம்பரம் இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும்.

*அதேபோல் திப்ருகார்–சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வந்த திப்ருகார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டு திப்ருகார்–தாம்பரம் இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும்.

இந்த நீட்டிப்பு முதற்கட்டமாக நாளை(திங்கட்கிழமை) முதல் 31–ந் தேதி வரை சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது.  இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story