விவசாயிகள் போராட்டத்தை கைவிடவேண்டும்; மு.க.ஸ்டாலின் அறிக்கை


விவசாயிகள் போராட்டத்தை கைவிடவேண்டும்; மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 6 Aug 2017 3:45 AM IST (Updated: 6 Aug 2017 1:43 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

மீண்டும் ஒரு முறை டெல்லியில் போராடினால் பிரதமர் நரேந்திர மோடி மனம் இறங்குவார் என்று நம்பி தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த ஜூலை 16–ந் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு டெல்லியில் கிடைத்த பரிசு அடக்குமுறையும், கைதும் மட்டுமே.

கடுங்குளிரிலும், மழையிலும் தங்களை வருத்தி கொண்டு போராடி வரும் விவசாயிகளின் நிலையை எண்ணி தி.மு.க. மிகுந்த வேதனைப்படுகிறது. இந்நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிக்கு கை கொடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை என்பதும், ‘கடன் தள்ளுபடி மாநில அரசின் கடமை’ என்று மத்திய பா.ஜனதா அரசு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதும் வருத்தமளிக்கிறது.

அய்யாக்கண்ணு மற்றும் அங்கு போராடும் விவசாயிகளும் தங்களை வருத்தி கொள்வதை பார்க்கும்போது நெஞ்சம் பதை பதைக்கிறது. விழிகள் கசிகிறது.

ஆகவே, தமிழக விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க தி.மு.க. என்றைக்கும் தயாராக இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்ளும் இந்த நேரத்தில், ‘‘கவலைப்படாதீர்கள், காலம் கனிந்து வரும். தி.மு.க. ஆட்சி விரைவில் அமையும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றப்படும்’’ என்ற உறுதியை அளித்து, டெல்லியில் போராடும் விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்புமாறு என் இதயபூர்வமாக மட்டுமல்ல – உங்களுடன் ஒன்றிணைந்துவிட்ட உணர்வுடன் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story