முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க. இடையே கூட்டணி; ஓ. பன்னீர் செல்வம்


முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க. இடையே கூட்டணி; ஓ. பன்னீர் செல்வம்
x
தினத்தந்தி 6 Aug 2017 8:38 PM IST (Updated: 6 Aug 2017 8:38 PM IST)
t-max-icont-min-icon

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க. இடையே கூட்டணி உள்ளது என ஓ. பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.

சிவகாசி,

சிவகாசியில் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க. இடையே கூட்டணி உள்ளது.

எடப்பாடி பழனிசாமியுடன் தி.மு.க. கை கோர்த்து கொண்டு மக்கள் பிரச்சினையை பேரவையில் பேசுவதில்லை. தமிழக அரசை குற்றம் சாட்டினால், துரைமுருகனுக்கு ஏன் கோபம் வருகிறது? என பேசியுள்ளார்.

சேகர் ரெட்டி விவகாரத்தில் என் மீது குற்றம் இருந்ததென்றால் சி.வி. சண்முகம் வழக்கு போடட்டும். அதனை சட்டப்படி சந்திப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story