தமிழகம்-புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை மையம்


தமிழகம்-புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை  மையம்
x
தினத்தந்தி 7 Aug 2017 3:30 PM IST (Updated: 7 Aug 2017 3:30 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

ஆந்திரபிரதேசம் மற்றும் வட தமிழகத்திற்கு இடையில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை கன்னியாகுமரி வரை நிலவுவதால் தமிழக கடலோரப் பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட கடலோர தமிழகத்திலும் கன மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பச்சலனம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story