ஆட்சிக்கு எதிராக ஓபிஎஸ் போராட்டம் நடத்துவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் -அமைச்சர் ஜெயக்குமார்


ஆட்சிக்கு எதிராக ஓபிஎஸ் போராட்டம்  நடத்துவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் -அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 8 Aug 2017 2:15 PM IST (Updated: 8 Aug 2017 2:15 PM IST)
t-max-icont-min-icon

ஆட்சிக்கு எதிராக ப்ப்.பன்னீர் செல்வம் போராட்டம் அறிவித்து நடத்துவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமாகும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

தமிழக நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. கட்சி இமயமலை போன்ற இரும்பு கோட்டையாகும். அது மண் சட்டி அல்ல, கவிழ்க்க முடியாது. சட்ட சபையில் எடப்பாடி பழனிசாமியுடன் துரை முருகன் கூட்டு சேர்ந்து இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருக்கிறார். அது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும்.

ஜெயலலிதாவால் அடை யாளம் காட்டப்பட்டவர் ஓ.பி.எஸ். அவர் இந்த அரசு மீது குற்றச்சாட்டு கூறுவது வேதனைக்குரிய செயல். இந்த ஆட்சிக்கு எதிராக போராட்டம் அறிவித்து நடத்துவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமாகும்.
இப்போது ஜெயலலிதா அரசை எடப்பாடி பழனிசாமி வழி நடத்தி செல்கிறார். எதிரிகளுக்கு இடமளிக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து ஜெயலலிதா ஏற்படுத்திய அரசை வழி நடத்த வேண்டும். இந்த அரசை யாரும் எள்ளி நகையாட இடம் தரக் கூடாது என்பதே எனது தாழ்மையான விண்ணப்பமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story