சென்னை-திருப்பதி மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை-திருப்பதி மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2017 4:15 AM IST (Updated: 10 Aug 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-நெல்லூர் இடையே மின்சார ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை,

சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-நெல்லூர் இடையே மின்சார ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாற்றங்கள் உடனடியாக அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து தினமும் காலை 7.15 மணிக்கு திருப்பதி நோக்கி மின்சார ரெயில் (வண்டி எண்:66015) இயக்கப்பட்டு வந்தது. இனி இந்த ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து பழைய எண்ணுடனேயே அரக்கோணத்துக்கு காலை 9 மணிக்கு சென்று, அங்கிருந்து 66039 என்ற வண்டி எண்ணுடன் காலை 9.05 மணிக்கு திருப்பதி நோக்கி புறப்படும்.

அதேபோல மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து மூர்மார்க்கெட் நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயிலும் (66014), அரக்கோணத்தில் இருந்து வேறு வண்டி எண்ணுடன் (66040) மூர்மார்க்கெட்டை வந்தடையும்.

இதேபோல மூர்மார்க்கெட்-திருப்பதி மின்சார ரெயில் (66021) சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து தினமும் காலை 7.45 மணிக்கு நெல்லூர் நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயில் (66035), இனி பழைய வண்டி எண்ணுடனேயே சூலூர்ப்பேட்டை செல்லும். அங்கிருந்து காலை 10.05 மணிக்கு 66037 என்ற வேறு எண்ணுடன் நெல்லூர் நோக்கி பயணிக்கும்.

அதேபோல மறுமார்க்கமாக நெல்லூரில் இருந்து மூர்மார்க்கெட் நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயிலும் (66022), சூலூர்ப்பேட்டையில் இருந்து வேறு வண்டி எண்ணுடன் (66037) மூர்மார்க்கெட்டை வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story