‘தலை விரித்தாடும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை தேவை’ சமூக ஆர்வலர்கள் தகவல்
சென்னையில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,
பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் சென்னை மாநகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையும், நடப்பாண்டு தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையும் போதிய அளவு பெய்யாததால் ஏரிகளில் எதிர்பார்த்த அளவு நீர்மட்டம் உயரவில்லை. அதிலும் குறிப்பாக சோழவரம் மற்றும் புழல் ஏரிகள் முற்றிலுமாக வறண்டுவிட்டன. மாறாக பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் மட்டும் சொற்ப அளவு மட்டுமே தண்ணீர் உள்ளது.
பூண்டி ஏரியில் 18 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கத்தில் 73 மில்லியன் கனஅடியும் தண்ணீர் இருப்பு உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பூண்டியில் 650 மில்லியன் கனஅடியும், சோழவரத்தில் 73 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 975 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,441 மில்லியன் கனஅடியும் தண்ணீர் இருப்பு இருந்தது.
ஏரிகளில் போதிய தண்ணீர் இல்லை என்பதால் மாற்று ஏற்பாடாக, கடல் நீரை குடிநீராக்கும் நிலையம், திருவள்ளூர் மாவட்ட விவசாய பம்பு செட்டுகள், நெய்வேலி சுரங்கம் மற்றும் கல்குவாரிகளில் இருந்து பெறப்பட்டு வரும் தண்ணீர் மூலம் ஓரளவு நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரின் சராசரி குடிநீர் தேவை 850 மில்லியன் லிட்டர் ஆகும். ஆனால் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அதில் பாதி அளவிலும் குறைவாக 400 மில்லியன் லிட்டர் அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதுபோதுமானதாக இல்லாததால் சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
குறிப்பாக மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், அண்ணாநகர், சிந்தாதிரிப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக இரவு பகல் பாராமல் தண்ணீர் கிடைக்கும் இடங்களை தேடி அலைகின்றனர். குறிப்பாக லாரிகளில் தண்ணீர் நிரப்பும் பம்பிங் ஸ்டேஷனுக்கு சென்று பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதற்காக பொதுமக்கள் இரண்டு சக்கர வாகனம், 3 சக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டிகளை வாடகைக்கு எடுத்து, அவற்றில் காலி குடங்களுடன் சென்று தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.
இதுகுறித்து மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:-
சென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தண்ணீருக்காக அலைந்து திரிவதை பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சினைகள் கடந்த காலங்களில் ஏற்பட்டபோது, வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ரெயில்களில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தாகம் தீர்க்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும் இதுவே தீர்வாக அமையும் என்று தான் தெரிகிறது. இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களும் அவ்வப்போது பழுதடைந்துவிடுவதால் இவற்றை முழுமையாகவும் நம்பமுடியவில்லை.
கொசஸ்தலை ஆறு உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதுடன், கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதேபோல் ஆந்திர மாநிலத்துடன் செய்துகொண்ட கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரிய அளவு தண்ணீரை கேட்டு பெற வேண்டும். மேலும் அரசும், அரசியல் கட்சியினரும் அரசியல் பிரச்சினைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தீவிரமாக தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story