மதுப்பிரியர்களுக்கு உற்சாகம்: கூடுதல் மது பாட்டில்களை வீடுகளில் வைத்துக்கொள்ள அனுமதி
கூடுதல் மது பாட்டில்களை வீடுகளில் வைத்துக்கொள்வதற்கு அனுமதித்து விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும், நீதித்துறை மூலமாகவும் அரசுக்கு பல வகைகளிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மதுவுக்கு எதிராக மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆரோக்கியமான விழிப்புணர்வால், மது விற்பனைக்கு ஆதரவாக புதிய நடவடிக்கைகளை அரசால் எடுக்க முடியவில்லை.
ஆனாலும், அரசுக்கு அமோக வருமானத்தை அள்ளித்தரும் டாஸ்மாக் மதுக்கடை வருமானத்தை ஒரேயடியாக விட்டுவிடவும் அரசால் முடியவில்லை. தமிழகம் முழுவதும் பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டாலும், அரசுக்கு வரும் வருமானத்தில் எந்த குறைவும் ஏற்படவில்லை.
எனவே இந்த சூழ்நிலைக்கு ஏற்ற வகையில், மது பாட்டில்கள் வைத்திருக்கும் விதியில் புதிய திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு மதுவகைகள் (தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வீட்டில் வைத்துக்கொள்ளுதல்) விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளில் 6 பாட்டில்களும் (4.5 லிட்டர்), இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுவகைகளில் 6 பாட்டில்களும், 12 பீர் பாட்டில்களும் (7.8 லிட்டர்), ஒயின் 12 பாட்டில்களும் (9 லிட்டர்) வைத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஒருவர் தனது வீட்டில் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளில் ஒரு பாட்டிலும், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுவகைகளில் ஒரு பாட்டிலும், ஒயின் ஒரு பாட்டிலும், 2 பீர் பாட்டில்களும் மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி மதுப்பிரியர் ஒருவரிடம் கேட்டபோது, ‘அரசின் இந்த நடவடிக்கை நல்லது தான். கையில் காசு இருக்கும்போது அதிக அளவில் வாங்கி வைத்துக்கொள்ளலாம். மேலும் பல கடைகளை மூடிவிட்டாலும்கூட, இருக்கும் கடைக்கு சென்று மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம்’ என்றார்.
சமூக ஆர்வலர் ஒருவரிடம் கேட்டபோது, ‘வீட்டில் வாங்கி வைத்து மது அருந்தும் வழக்கம் தமிழகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் இல்லை. சில உயர் குடும்பங்களில் மட்டுமே ஓரளவு இந்த வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய திருத்தம், தமிழகத்தில் புதிய மதுக் கலாசாரத்தை வரவழைத்துவிடும். சாதாரண நடுத்தர மக்களும் அதிக மது பாட்டில்களை வீட்டில் வாங்கி வைக்கும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே அதிகமாக குடிக்கும் நிலையும் ஏற்படும். பெரும்பாலான மதுக்கடைகளை அரசு மூடிவிட்டாலும், மது விற்பனையையும் குறையாமல் பார்த்துக் கொள்வதற்கான தந்திரம் தான் இது’ என்றார்.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளாக இந்த விதியில் திருத்தம் கொண்டுவரப்படவில்லை. மற்ற மாநிலத்தில் இருக்கும் நிலவரப்படி விதியைத் திருத்தி இருக்கிறோம். கர்நாடகாவில் ஒருவர் தன் வீட்டில் 24 பாட்டில் விஸ்கி, ரம், பிராந்தி, ஜின், ஓட்கா போன்ற மதுவகைகளை வைத்திருக்க முடியும். 28 பீர் பாட்டில்களை அங்கு வைக்க அனுமதி உண்டு. அந்த அளவுக்கு தமிழகத்தில் அனுமதிக்கப்படவில்லை.
ஆனாலும், தமிழகத்தில் ஒருவர் தன் வீட்டில் எவ்வளவு மது பாட்டில்கள் வைத்திருக்கிறார் என்றெல்லாம் ஆய்வு செய்யப்போவதில்லை. ஆனால் விதிகளை மீறி அதிக மது பாட்டில்களை வைத்திருந்தால், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்படும். இதற்கு குறைந்தபட்ச தண்டனை ரூ.2 ஆயிரம் அபராதம். மதுவின் தரத்துக்கு ஏற்ப அபராதத் தொகை உயரும்.
வீடுகளில் வைப்பதற்கு மட்டுமே இந்த புதிய விதித்திருத்தம் அனுமதிக்கிறதே தவிர, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story