எடப்பாடி அணி தீர்மானம் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை


எடப்பாடி அணி தீர்மானம் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 10 Aug 2017 1:31 PM IST (Updated: 10 Aug 2017 1:31 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி அணி தீர்மானத்தை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

சென்னை,

டி.டி.வி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது.டி.டி.வி தினகரனால் கட்சியின் எந்த பதவியையும் வகிக்க முடியாது  என எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க தலைமை கழகத்தில்  நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டதும் ஓ.பி.எஸ். முகாம் பரபரப்படைந்தது.

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த  ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்கனவே  அ.தி.மு.க. அணிகள் இணையும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இப்போது தினகரனை  ஓரம் கட்டி விட்டதால் இணைப்புக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Next Story