ஜெயலலிதா வகித்த பதவியில் வேறு யாரையும் அமர்த்தி பார்க்க தொண்டர்கள் விரும்பவில்லை தீர்மான முழு விவரம்


ஜெயலலிதா வகித்த பதவியில் வேறு யாரையும் அமர்த்தி பார்க்க தொண்டர்கள் விரும்பவில்லை தீர்மான முழு விவரம்
x
தினத்தந்தி 10 Aug 2017 2:17 PM IST (Updated: 10 Aug 2017 2:22 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.


சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக் குமார், திண்டுக்கல் சீனிவா சன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன், உதய குமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன், கே.சி.வீரமணி, துரைக் கண்ணு, கருப்பண்ணன், பாலகிருஷ்ண ரெட்டி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், ராஜேஸ்வரி ஆகி யோர் கலந்து கொண்டனர். தலைமை கழக நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில்  நிறைவேற்றபட்ட தீர்மானம் முழுவிவரம் வருமாறு:-

புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரால் தோற்றுவிக்கப் பட்டு புரட்சித்தலைவி அம்மாவால் அவரது வாழ்க்கையே அர்ப்பணித்து, வளர்க்கப்பட்டு இன்று இந்திய திருநாட்டின் 3-வது பேரியக்கமாக உரு வெடுத்துள்ள அ.தி.மு.க. வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

நாம் வணங்கும் இதய தெய்வமான புரட்சித் தலைவி அம்மா நம்மை அனைவரையும் மீளா துயரில் விட்டு விட்டு 5.12.2016 அன்று மண்ணுலகை விட்டு மறைந்ததை இன்றும் ஏற்க இயலாத மன நிலையில் நாம் அனைவரும் உள்ளோம். நாம் ஒவ்வொருவரும் அவரது ஆன்மாசாந்தி அடைய அவரது நோக்கங்களை, லட்சியங்களை, கொள்கை களை நிறைவேற்ற ஒன்று கூடி உறுதிமொழி எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பொன்மொழிக்கேற்ப நாம் ஒன்று கூடி அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். நமது கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக கழக பணியாற்றிய அம்மாவின் இடத்தில் வேறு எவரையும் நமது கழக தொண்டர்கள் அமர்த்தி அழகு பார்க்க விரும்ப மாட்டார்கள்.

அம்மாவின் மறைவிற்கு பின்னர் வி.கே.சசிகலாவை பொதுச்செயாளராக கழக சட்டதிட்டங்கள்படி  புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் வரை நிய மிக்கப்பட்டாலும் அசா தாரண சூழ்நிலையின் காரணமாக அவரால் செயல்படா நிலை ஏற்பட்டுள்ளதாலும் மற்றும் பல்வேறு நபர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் அவரது நியமனத்தை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாலும் நமது கழகத்தின் சட்டதிட்ட விதி 20(வி)படி நமது கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக புரட்சித் தலைவி அம்மா வால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்று கூடி புரட்சித் தலைவி அம்மாவின் வழிகாட்டு தலின்படி கழகத்தையும், ஆட்சியையும் வழி நடத்தி வருகிறோம்.

இந்நிலையில் புரட்சித் தலைவி அம்மாவால் 19.12.2011 தேதியில் அடிப் படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் கடந்த 14.2.2017 தேதியில் கழகத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு அவரை 15.2.2017 தேதியில் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது நமது கழகத்தின் சட்டதிட்ட விதி 30(வி)ற்கு விரோதமானது.

அவர் தொடர்ந்து 5 ஆண்டு காலம் அடிப்படை உறுப்பி னர் பதவியை வகிக்காத காரணத்தினால் அவரால் கழகத்தின் எப்பொறுப்பையும் கழக சட்டத்திட்ட விதிகளின்படி வகிக்க இயலாது.

டி.டி.வி.தினகரன் கழக துணைப்பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத் திற்கு எழுதிய கடிதத்தை 3.3.2017 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் பதில் கடிதத்தில், கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தலைவி அம்மாவால் நியமனம் செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலில் டி.டி.வி.தினகரன் பெயர் இடம்பெறவில்லை என்று கூறி அவர் கடிதத்தை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டது.

மேலும் அவரை துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்த பொதுச் செயலாளரின் நியமனமும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது.
 
இவைகளுக்கு மாறாக டி.டி.வி.தினகரன் தன்னிச்சையாக கடந்த 4.8.2017 தேதியில் நமது கழகத்திற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நமது கழகத்தை அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு புரட்சித் தலைவி அம்மாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்று கூடி வழி நடத்தி வரும் நிலையில் நமது கழகத்தில் வீண் குழப்பங்கள் ஏற்படுத்த அவரால் வழங்கப்படும் அறிவிப்புகள் அ.தி.மு.க. தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத்தாது.

அவரது அறிவிப்புகள் மூலம் நியமனம் செய்யப் பட்ட பொறுப்புகள், கழக சட்டதிட்டவிதிகளின்படி செல்லக்கூடியவை அல்ல. கழகத் தொண்டர்கள் அதனை நிராகரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உயரிய லட்சியமான “ஒவ்வொரு கழக தொண்டனுக்கும் வாய்ப்பு”, “உழைப்பால் ஒவ்வொரு வரும் எல்லா நிலையையும் அடைய வேண்டும்” என்பதை நிறைவேற்ற, நாம் அனைவரும் ஒன்று கூடி கழகத்தையும், அதன் ஆட்சியையும் வழி நடத்துவோம் என உறுதி ஏற்போம். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story