முரசொலி பவளவிழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன கருணாநிதி உருக்கம்


முரசொலி பவளவிழாவைக் கண்டு  விழிகள் மட்டும் விரிந்திடவில்லை சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன கருணாநிதி உருக்கம்
x
தினத்தந்தி 10 Aug 2017 7:00 PM IST (Updated: 10 Aug 2017 6:59 PM IST)
t-max-icont-min-icon

முரசொலி பவளவிழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் முரசொலி பவளவிழா  கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இதில் முன்னணி பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில்  திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முரசொலி பவளவிழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை. சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன. தமக்கு அன்பெனும் அமுதம் ஊட்டி ஆதரவு கரம் நீட்டிய தமிழ் பெருமக்களுக்கு நன்றி. என் கடன் பணி செய்து கிடப்பதே.  அரசியலுக்கு அப்பாற்பட்டு முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story