21 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து தலைமைச் செயலாளர் உத்தரவு


21 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து தலைமைச் செயலாளர் உத்தரவு
x
தினத்தந்தி 11 Aug 2017 12:30 AM IST (Updated: 10 Aug 2017 11:05 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசுத்துறை அதிகாரிகளுக்கு (மாநில சிவில் சர்வீஸ்) ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நிலை உயர்வு அளித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்

சென்னை,

தமிழக அரசுத்துறை அதிகாரிகளுக்கு (மாநில சிவில் சர்வீஸ்) ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நிலை உயர்வு அளித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஐ.ஏ.எஸ். பணியில் ஏற்பட்டுள்ள காலி இடங்களுக்கு ஏற்ற வகையில் தமிழகத்தில் 21 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி அவர் ஆணையிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

2014–ம் ஆண்டில் ஏற்பட்ட காலியிடங்களின்படி, கவிதா ராமு, டி.அன்பழகன், ஏ.ஜான் லூயிஸ், எஸ்.அமிர்தஜோதி, எஸ்.சிவராசு, பி.உமாமகேஸ்வரி, பி.ஸ்ரீவெங்கடபிரியா, ஆர்.சீதாலட்சுமி, ஏ.சண்முகசுந்தரம், மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் ஐ.ஏ.எஸ். நிலைக்கு உயர்த்தி உத்தரவிடப்படுகிறது.

2015–ம் ஆண்டில் ஏற்பட்ட காலியிடங்களின் அடிப்படையில், எஸ்.பி.கார்த்திகா, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.வளர்மதி, கே.பேச்சியம்மாள், பி.மணிமாறன், டி.மோகன், கே.பாலசுப்பிரமணியம், கே.வி.முரளிதரன், கலைச்செல்வி மோகன் ஆகியோர் ஐ.ஏ.எஸ். நிலைக்கு உயர்த்தப்படுகின்றனர்.

2016–ம் ஆண்டில் ஏற்பட்ட காலியிடங்களின்படி, பி.ரமணா சரஸ்வதி, ஜெ.விஜயராணி ஆகியோர் ஐ.ஏ.எஸ். நிலை உயர்வு பெறுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story