ஓதுவார்களுக்கு சம்பள உயர்வு வழங்கக்கோரி வழக்கு அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஓதுவார்களின் சம்பளத்தை அரசாணையின்படி உயர்த்தி வழங்கக்கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த சிங்காரவேலன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஓதுவார் குடும்பத்தை சேர்ந்த நான், இளஞ்சிகுமாரர் கோவிலில் ஓதுவாராக பணியாற்றி வருகிறேன். தேவாரம் மற்றும் திருவாசகத்தை கோவிலில் பாடி வருகிறேன். கோவில்களில் ஓதுவார்களாக பணியாற்றுபவர்களின் சம்பளத்தை வரைமுறைப்படுத்தி கடந்த 2004-ம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனாலும் எனக்கு குறைந்த சம்பளம் தான் வழங்கப்பட்டது.
இதனால், அரசாணைப்படி சம்பளத்தை உயர்த்தி வழங்குமாறு கேட்டேன். இதனையடுத்து ரூ.9,900 ஆக எனது சம்பளம் உயர்த்தப்பட்டது. ஆனால், அரசாணையில் கூறப்பட்டுள்ளது போல சம்பள உயர்வு வழங்கவில்லை. ஏராளமான கோவில்களில் பணியாற்றும் ஓதுவார்கள் அரசாணைப்படி அதிக சம்பளம் பெறுகின்றனர். ஆனால், குறைந்த சம்பளம் பெறும் என்னை போன்ற ஓதுவார்களால் தான் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவை பாடப்படுகிறது.
இதன்மூலம் தமிழ் கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்படுகிறது. அரசாணைப்படி சம்பளத்தை கணக்கிட்டால் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான நிலுவை தொகையை எனக்கு வழங்க வேண்டியிருக்கும். இதுதொடர்பான என்னுடைய கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். எனவே என்னை போன்ற ஓதுவார்களுக்கு அரசாணைப்படி சம்பளத்தை உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது “மனுதாரரைப் போல வேறு கோவில்களில் யாராவது குறைந்த சம்பளம் வாங்குகிறார்களா” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு மனுதாரர் வக்கீல், “ஓதுவார்களுக்கு 45 நிலைகளில் சம்பளம் வழங்கப்படுகிறது. பழனி, திருச்செந்தூர் போன்ற பிரபலமான பல்வேறு கோவில்களில் பணியாற்றுபவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது” என்றார்.
“ஏன் பெரிய கோவில், சிறிய கோவில் என்று பிரித்து பார்க்க வேண்டும். அனைத்து கோவில்களையும் ஒரே மாதிரியான பார்வையில் பார்க்கலாமே” என்று நீதிபதி தெரிவித்தார்.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், கோவில்களின் வருமானத்தின் அடிப்படையில் தான் ஓதுவார்களுக்கு சம்பளம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒரு காலத்தில் ஓதுவார்கள் இல்லாமல் எந்த கோவில் திருவிழாவும் நடப்பதில்லை. ஆனால் தற்போது பல கோவில்களில் ஓதுவார்களே இல்லை. ஓதுவார்களின் இந்த நிலையை பரிவுடன் கவனிக்க வேண்டியது அரசின் கடமை. ஏனெனில் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. குறைவான சம்பளத்தை வைத்து குடும்பத்தை எப்படி சமாளிப்பார்கள். ஓதுவார்களை பாதுகாத்தால் தான் தேவாரத்தையும், திருவாசகத்தையும் பாதுகாக்க முடியும். அப்போது தான் நமது பாரம்பரியமும், கலாசாரமும் பாதுகாக்கப்படும்.
எனவே, ஓதுவார்கள் மற்றும் அவர்களது சம்பளம் குறித்து முழுமையான தகவல்களுடன் அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Tags :
Next Story