மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம் 20–ந்தேதி சென்னை திரும்புவார் என தகவல்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு நேற்று இரவு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
சென்னை,
ஒரு வாரம் அங்கு தங்கியிருந்து 20–ந்தேதி சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–
என்னை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ யாராக இருந்தாலும் கவலையில்லை. நாடு நன்றாக இருக்க வேண்டும். மக்கள் படும் அவதிகளுக்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்றால் தற்போது நடந்துகொண்டு இருக்கும் ஆட்சி உடனே அகற்றப்பட வேண்டும். அது தான் எங்களுடைய உணர்வு. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story