‘அண்ணன் ஓ.பன்னீர்செல்வம்’ சாதகமான கருத்தை தெரிவித்துள்ளார்; அ.தி.மு.க. அணிகளின் இணைப்பு முழு வடிவம் பெற்றுள்ளது
இரு அணிகளின் இணைப்பு முழு வடிவம் பெற்றுள்ளது என்றும், அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் சாதகமான கருத்தை தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
சென்னை,
சென்னை பட்டினப்பாக்கத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் ஜெயகுமார் நேற்று மாலை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும், நிலைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அண்ணன்–தம்பிகளுக்குள் சின்ன சின்ன பிரச்சினைகள் வரும். அதெல்லாம் தீர்க்கப்பட்டு விடும். வாருங்கள் பேசுவோம் என்ற அடிப்படையில் இன்றைக்கு இரு அணிகளின் இணைப்பு முழுமையான அளவு செயல் வடிவம் பெற்று இருக்கிறது. விரைவில் ஒரு நல்ல முடிவை எட்டுவோம்.அந்த அடிப்படையில் தான் டெல்லியில் கூட அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்த பிறகு நிருபர்களை சந்தித்தபோது இணைப்பு குறித்து சாதகமான தகவலை தெரிவித்து இருக்கிறார். இதனை நாட்டு மக்களுக்கும் தெரிவித்து இருக்கிறார். எனவே நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. கட்சி ஒன்றுபடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story