ஏ.கே.விஸ்வநாதன், சேஷசாய் உள்ளிட்ட 26 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் சேஷசாய் உள்ளிட்ட தமிழக போலீஸ் அதிகாரிகள் 26 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சுதந்திர தினத்தையொட்டி இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக மற்றும் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றும் போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஜனாதிபதி விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. 2017–ம் ஆண்டுக்கான ஜனாதிபதி விருதை பெறும் தமிழக போலீஸ் துறையை சேர்ந்தவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.அந்த பட்டியல் விவரம் வருமாறு:–
1. ஏ.கே.விஸ்வநாதன் – சென்னை போலீஸ் கமிஷனர்
2. சேஷசாய் – சென்னை நகர தலைமையிட கூடுதல் போலீஸ் கமிஷனர்
3. சி.ராஜா – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, முதல்–அமைச்சர் பாதுகாப்பு பிரிவு
4. தீபக் எம்.டாமோர் – திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.
5. அனிசா உசேன் – இந்தோ திபெத்திய எல்லை காவல் படை டி.ஐ.ஜி.
6. வனிதா – வேலூர் சரக டி.ஐ.ஜி.
7. கார்த்திகேயன் – திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.
8. பவானீஸ்வரி – திருச்சி சரக டி.ஐ.ஜி.9. செந்தில்குமாரி – வணிகக்குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு
10. ஆசியம்மாள் – குற்றப்பிரிவு குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு
11. எம்.பாஸ்கரன் – நீலகிரி மாவட்ட தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு
12. அசோக்குமார் – திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை சூப்பிரண்டு
13. ஜி.சங்கர் – சென்னை வடபழனி உதவி போலீஸ் கமிஷனர்
14. சுந்தரம் – தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு
15. வசந்தசெல்வன் – ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு தலைமையிட துணை சூப்பிரண்டு
16. எஸ்.பண்பாளன் – ஈரோடு சிறப்பு அதிரடிப்படை துணை சூப்பிரண்டு
17. தனசேகரன் – தமிழ்நாடு சிறப்பு காவல்படை பூந்தமல்லி உதவி தளவாய்
18. ராஜேஷ் – ஈரோடு லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்
19. வெற்றிச்செல்வன் – கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர்
20. நெல்சன் – திருப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர்
21. நாகராஜன் – மதுரை மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்
22. மோகன் – தாராபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்
23. சேகர் – சென்னை குற்ற ஆவண காப்பக கம்ப்யூட்டர் பிரிவு சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்
24. ஆறுமுகம் – சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்
25. இருதயராஜ் – சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைமையிட சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்
26. ஜோசப்ராஜ் – தமிழ்நாடு பயிற்சி பள்ளி சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்.
இவர்களுக்கான விருதுகள் தனியாக நடைபெறும் விழாவில் முதல்–அமைச்சரால் பின்னர் வழங்கப்படும். 2013–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரையிலான ஜனாதிபதி விருதுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் விழாவில் முதல்–அமைச்சரால் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மத்திய சிறை வார்டர் எஸ்.முருகேசன், திருச்செந்தூர் சிறை தலைமை வார்டர் கந்தசாமி ஆகியோருக்கும் ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.